செவ்வாய், 12 மே, 2009

தமிழ் "ஈ"

1986 ஆம் வருடத்தில் என் பாடசாலை வாழ்க்கையை இலங்கையில் ஆரம்பித்தேன்.முதலாம் வகுப்பில் எமக்கு யாழ்ப்பான பதிப்பாகிய "பாலபோதினி" நூலே அறிசுவடியாக பாவிக்கப்பட்டது. இந்திய அறிசுவடிகள் போல் வர்ணமயமாக கண்கவர்ந்ததாக இப்புத்தகம் இருக்கவில்லை. பச்சை, நீளம், சிவப்பு நிறங்கள் கொண்ட புத்தகம்.எழுத்துகள் கருமை நிறத்திலும், உருவங்கள் கோட்டு வரைபடங்களாக தான் இருக்கும்.எனக்கு இந்த நூலில் பெரிய நாட்டம் இல்லை.

ஆனால்..... என் அன்னையோ இந்த அறிசுவடியை புகழ்ந்து பேசுவார்கள். ஏனெனில், உயிர் எழுத்து "ஈ"- "ஈழம்" என்று கற்பிக்கப்பட்டது. இதற்கு உரிய படம், முழு இலங்கை.

இந்த சொல்லை எமக்கு பாலர் வகுப்பில் அறிமுகப்படுதியதல் "ழ"கரம் ஒழுங்காக உச்சரிக்க கற்று தரப்பட்டது.

மற்றைய அறிசுவடிகள் போன்று "ஈ" என்ற பூச்சியை எம் தமிழ் எமக்கு கற்று தரவில்லை.


ஆனால் இன்று என்னால் வாய் விட்டு
"ஈழம்" என்ற சொல்லை உச்சரிக்க முடியவில்லை.

என் இனம் "ஈ" மொய்க்கும் சடலங்கலக்கப்பட்டு வருகிறது.2009 தமிழ் இன படுகொலை வருடம் என வரலாறு கூறும்.தமிழர் என்றும் வரலாறு படைப்பவர்களே ! சாவிலும் படைப்போம் வரலாறு.

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக